நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு?


நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு?
x
தினத்தந்தி 6 Jun 2020 7:04 PM IST (Updated: 6 Jun 2020 7:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதி,

திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு
ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தாக TTD செய்தி குறிப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.



Next Story