கொரோனா பாதிப்பு; தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க.வின் சென்னை மேற்கு மண்டல செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ந்தேதியன்று கொரோனா, மூச்சு திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வென்டிலேட்டர் மூலம் 80% பிராண வாயு செலுத்தப்பட்ட நிலையில், நேற்று 67% மட்டுமே தேவைப்பட்டது. அவருக்கு பிராண வாயு தேவை இன்று 29 சதவீதம் ஆக குறைந்து உள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story