முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
சென்னை,
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் ருத்ரதாண்டவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
சென்னையில் கொரோனா தீவிரம் அடைந்ததை அடுத்து, இந்த சிறப்பு கண்காணிப்புக் குழுவை மாற்றி அமைத்து மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழு மண்டலம் வாரியாக கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சிறப்புக்குழுவை கண்காணிக்க நேற்று முன் தினம் மண்டல வாரியாக அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் சிறப்பு திட்டங்கள் வகுத்து அதனை செயல்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சால் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த இந்த மண்டலங்களில் நுண்ணிய அளவிலான சிறப்பு திட்டங்கள் வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது. பவன் குமார் பன்சால் மண்டலம் வாரியாக உள்ள அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து சிறப்பு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி, மண்டலங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தினமும் தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று உயிரிழந்த 19 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதன்படி, 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 31 வயது இளைஞருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் திடீர் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் 30 வயது இளைஞர் ஒருவர் 4ஆம் தேதி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி திடீரென இறந்துவிட்டதாக சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று தினங்களில் இறந்ததாகவும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . சென்னையை சேர்ந்த 67 வயது முதியவர் 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, 5ஆம் தேதி இறந்ததாகவும், அவருக்கு பிறநோய் பாதிப்பு இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கு, பெரும்பாலும், சர்க்கரை மற்றும் பிற நோய் பாதிப்பு இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுகிறார். சென்னையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதலமைச்சர் உரையாற்ற உள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பு பணி குறித்து விளக்கம் அளித்த நிலையில் முதலமைச்சர் மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

Related Tags :
Next Story