அரண் எழுப்பித் தடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும் - இப்போது தேவை சொல் அல்ல; செயல்! தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


அரண் எழுப்பித் தடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும் -  இப்போது தேவை சொல் அல்ல; செயல்! தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jun 2020 9:07 PM IST (Updated: 7 Jun 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

அரண் எழுப்பித் தடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும், இப்போது தேவை சொல் அல்ல; செயல் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

50% கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை மறைத்து விட்டது என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.

சென்னை மக்களின் உயிரோடு விளையாடுவதைக் கைவிட்டு, ‘சமூகப் பரவல்’ வந்து விட்டதா என்பதை ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என தமிழக அரசு ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி, சென்னையின் 5 மண்டலங்களை கடும் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி-தேவையானவற்றை அரசே வழங்கி- அரண் எழுப்பித் தடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும். இப்போது தேவை சொல் அல்ல; செயல்! என பதிவிட்டுள்ளார்.


Next Story