ராயபுரம் அரசு சிறார் காப்பகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா
ராயபுரம் அரசு சிறார் காப்பகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள அரசு சிறார் காப்பகத்தில் 19 சிறுவர்கள் மற்றும் 4 ஊழியர்கள் என 23 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதியானது. அனைவரும் ஸ்டான்லி மற்றும் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிறார் காப்பகத்தில் உள்ள மேலும் 12 சிறுவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. காப்பகத்தில் இருந்த மற்ற 20 குழந்தைகள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஊரடங்கால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மத்திய அரசின் சார்பில் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து 4,662 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இதுவரை 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தநிலையில் குவைத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த 4 பேருக்கும் என மேலும் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து 278 விமானங்களில் 17 ஆயிரத்து 973 பேர் வந்து உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்தில் வேலை செய்து வரும் 32 வயது பெண் மற்றும் 34 வயது ஆண் என 2 சுகாதார ஆய்வாளர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் 49 வயது ரேஷன் கடை ஊழியர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது குழந்தை உள்பட திரு.வி.க. நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story