தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டது கொரோனா; 1,562 பேருக்கு தொற்று உறுதி


தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டது கொரோனா; 1,562 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 8 Jun 2020 7:42 PM IST (Updated: 8 Jun 2020 7:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.  இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேரும் அடங்குவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 667 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரையில் 269 பேர் மரணம் அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் மேலும் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், பலியானோர் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் ஒரே நாளில் 528 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 17 ஆயிரத்து 527 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

Next Story