ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை தாண்டியது தண்டையார்பேட்டையில் 3 ஆயிரத்தை கடந்தது
ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.
சென்னை,
தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அதன்படி சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
திரு.வி.க நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தையும், வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர் ஆகிய 3 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து உள்ளது.
அந்தவகையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயபுரம் மண்டலம், குணமடைவோர்கள் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது. அந்த மண்டலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 300 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரையில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர்.
Related Tags :
Next Story