கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது- முதல்வர் பழனிசாமி


கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 11 Jun 2020 1:19 PM IST (Updated: 11 Jun 2020 3:29 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்

சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை.

உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்.கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மருத்துவர்களின் திறமையால் சிகிச்சை அளிக்கப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

பின்னர், புதிய மேம்பாலத்தில் அவர் காரில் பயணித்து ஆய்வு செய்தார். பின்னர் பேசிய முதல்வர், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஈரடுக்கு மேம்பாலம் கடப்பட்டதாகவும், இதன் மூலம் சேலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகக் கூறினார். இன்று திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்திற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாகவும், அவர் அறிவித்தார். 

Next Story