மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது- முதல்வர் பழனிசாமி


மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 12 Jun 2020 11:24 AM IST (Updated: 12 Jun 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது; தவறான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். 

மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

மேட்டூர் அணையின் நீர் திறப்பால் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம்  பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரி மாதத்திற்குள் 100ஏரிகளை நிரப்ப முடியும். கொள்ளிடம் குறுக்கே கீழணைக்கு பதில் புதிய அணை கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.நாமக்கல் அருகே ராஜவாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை .பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள்.அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள்

கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

Next Story