தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை


தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை
x
தினத்தந்தி 15 Jun 2020 1:53 PM IST (Updated: 15 Jun 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வுகளை குறைக்க முதலமைச்சருக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்து உள்ளது.

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ நிபுணர் குழு  ஆலோசனை நடத்தியது,கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை குறைக்க தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்து உள்ளது. ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையை பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்

சென்னையில் 3 மண்டலங்களில் அதிக பாதிப்பு. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளது.

தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story