இணையவழி கல்விமுறை நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்


இணையவழி கல்விமுறை நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Jun 2020 8:01 PM IST (Updated: 17 Jun 2020 8:01 PM IST)
t-max-icont-min-icon

இணையவழி கல்விமுறை நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை என்றும் நிழல் நிஜமாகிவிடாது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இணையவழி வகுப்பு நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அதிமுக அரசு, திறைமறைவில் குழுவை அமைத்து அதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை புறக்கணித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அதிமுக அரசின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் இணையவழி கல்வியை பெறத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை.

ஆசிரியரிடம் நேரடியாக கேள்வி கேட்டு கலந்துரையாடாமல், கல்வியை கற்றுக் கொள்வது சிரமம். கல்வி என்பது கற்றறிய வேண்டியது, அது பங்குச்சந்தை வியாபாரம் போன்றது அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

மேலும் இணையவழி கல்வியால் மாணவர்களின் உடல்நிலை பாதிப்படைவதோடு, தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் கணிணியை பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வை குறைபாடுகள் ஏற்படலாம்.

நேரடியாகக் கற்றல்-கற்பித்தல் என்ற வகுப்பறை சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இணையவழிக்கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை. நிழல் நிஜமாகிவிடாது” என்று தெரிவித்துள்ளார். 

Next Story