தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனத்தினால் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோவை, தேனி மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டமுடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியை ஒட்டியும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தின் காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாக கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று இன்று முதல் வருகிற 23ந்தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். மத்திய அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். அதனால் மீனவர்கள் யாரும் மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story