பாடத்திட்டத்தை குறைக்க கல்விக்குழு: அமைச்சரின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு
பாடத்திட்டத்தை குறைக்க கல்விக்குழு அமைச்சர் அமைத்திருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு அளித்துள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவர்களின் இன்றைய பாடத்திட்டத்தை மறு பரிசீலனை செய்து அதனை குறைக்க இயலுமா? என ஆய்வு செய்வதற்கு ஒரு கல்வி ஆய்வுக்குழுவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அமைத்திருப்பதாக அறிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் கல்விப்பயில உள்ள நாட்கள், பாடத்திட்டத்தின் அளவு, மாணவர்கள் கற்கும்திறன் அளவு, ஆசிரியர்கள் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இக்குழு பாடத்திட்டத்தை குறைத்து அமைக்க நல்லவாய்ப்பு எழுந்துள்ளது. இந்த முயற்சியில் கல்வியின்தரம் குறையாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் நலன், கல்வியின்தரம் ஆகிய அனைத்தையும் கவனத்தில்கொண்டு செயல்படஉள்ள இக்கல்விக்குழு நியமனத்தை முழுமனத்துடன் த.மா.கா. வரவேற்கிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story