கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவு


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jun 2020 2:04 PM IST (Updated: 22 Jun 2020 2:04 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போது 12 நாள் முழுஊரடங்கு அமலில் உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும் முழுஊரடங்கு அமலில் உள்ளது.
                    
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், முழுஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது.


Next Story