செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 23 Jun 2020 11:45 AM IST (Updated: 23 Jun 2020 11:45 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து உள்ளது.

சென்னை

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், உள் மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக மதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 849 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருக்கிறது

திருவண்ணாமலையில் 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்திருக்கிறத

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது இன்று மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர் சிகிச்சையில் 1850 பேர் உள்ளனர்.1968 பேர் குணமடைந்து உள்ளனர்


Next Story