சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி
சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களில் ஒருவராக இருக்கும் காவல்துறையினரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் பலியாகியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா நோய்த்தொற்றுக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

Related Tags :
Next Story