நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து-ஒருவர் உயிரிழப்பு


நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து-ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 July 2020 10:53 AM IST (Updated: 1 July 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.


Next Story