"சம்பந்தப்பட்டவர்களை சத்தியமா விடவே கூடாது" - சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினிகாந்த் ஆவேசம்


சம்பந்தப்பட்டவர்களை சத்தியமா விடவே கூடாது - சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினிகாந்த் ஆவேசம்
x
தினத்தந்தி 1 July 2020 12:14 PM IST (Updated: 1 July 2020 2:03 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை  தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-

தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story