என்எல்சி அனல் மின் நிலைய விபத்தில் 6 பேர் பலி: அமித் ஷா இரங்கல்
என்எல்சி அனல் மின் நிலைய விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நெய்வேலி என்.எல்.சியில் நடந்த விபத்து சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறினேன். மத்திய அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story