ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்: 28% பேர் மட்டுமே சிகிச்சை
சென்னையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டையில் 70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில், முதல் இடத்தில் ராயபுரமும், 2வது இடத்தில் தண்டையார்பேட்டையும் உள்ளது.
ராயபுரத்தில் இதுவரை 8 ஆயிரத்து 89 பேரும், தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 637 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும், மறுபுறம் குணமடையும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதன்படி ராயபுரத்தில் இதுவரை 5 ஆயிரத்து 639 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் ராயபுரத்தில் 2 ஆயிரத்து 309 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 29 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
இதேபோல், தண்டையார்பேட்டையில் இதுவரை 4 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது, தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 838 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 28 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story