மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை + "||" + Reduce the price of petrol and diesel Vijayakanth demands for Central and State Governments

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்த விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும்  நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சா எண்ணையின் விலை வெகுவாக குறைந்துவரும் நிலையில், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். தனிநபரின் வருமானம் ஆமை வேகத்திலும், பெட்ரோல், டீசல் விலை புலி வேகத்திலும் உயர்ந்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்றும், அதில் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவர் எனவும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு
பெட்ரோல் விலையில், 14-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுலை10) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலை 12-வது நாளாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று(ஜுலை 9) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
5. டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் 7 நாட்களுக்கு பிறகு டீசல் விலை .19 காசுகள் உயர்ந்துள்ளது.