லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது" - மதுரை தென்மண்டல ஐஜி முருகன் பேட்டி
லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது" என்று மதுரை தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு என புதிதாக பொறுப்பேற்ற மதுரை தென்மண்டல ஐஜி முருகன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- “
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக மிகவும் தைரியமாக சாட்சியம் அளித்த அந்த காவல் நிலைய தலைமை பெண் காவலர் ரேவதிக்கு காவல்துறை சார்பில், தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்.காவல் நிலையங்களில் மரணம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. தென்மாவட்டங்களில் இதனை தடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிசிஐடி சிறப்பான விசாரணையை மேற் கொண்டுள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பை உள்ளூர் போலீசார் வழங்குகின்றனர். சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்படும் காவலர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினருக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Tags :
Next Story