மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: அவசர சட்டத்தை கவர்னர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு குறித்து அவசர சட்டத்தை கவர்னர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் அவசியம்ஆகும். நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, அத்தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கும், மருத்துவப்படிப்பில் தேவையான மதிப்பெண்கள் பெறுவதற்கும் லட்சக்கணக்கில் பணம்செலுத்தி, தனியார் பயிற்சிமையங்களில் குறைந்தது இருஆண்டுகள் பயிற்சிபெறவேண்டியுள்ளது.
அரசுபள்ளிகளில் படிக்கும் ஏழைமாணவர்களுக்கு இது சாத்தியப்படாது. இத்தகையசூழலில் அரசுபள்ளி மாணவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை கருத்தில்கொண்டு மருத்துவப்படிப்பில் அவர்களுக்கு தனிஇடஒதுக்கீடு வழங்குவதுதான் சமூகநீதி ஆகும். தமிழகஅரசின் இந்த நல்லமுயற்சிக்கு கவர்னர் துணையாக இருக்கவேண்டுமேதவிர, தேவையற்ற தாமதம்செய்து தடையாகஇருக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் பிளஸ்-2வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த ஒருவாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளன. தேர்வுமுடிவுகள் வெளியானவுடன் மருத்துவக்கல்வி மாணவர்சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்படவேண்டும். அதில் அரசுபள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து குறிப்பிடப்படவேண்டும். அதற்குவசதியாக அரசுபள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் தனிஇடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அவசரசட்டத்தை கவர்னர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story