என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் - என்.எல்.சி நிர்வாகம் அறிவிப்பு


என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் - என்.எல்.சி நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 July 2020 6:18 PM IST (Updated: 2 July 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதையடுத்து உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்கப்படும்  என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story