அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 2 July 2020 7:43 PM IST (Updated: 2 July 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாகூரான், செல்வி தம்பதியின் ஏழு வயது மகள், அவர்களது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் வந்த போலீசார், ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதனை தொடர்ந்து  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சூழலில்  7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளது.

ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் டுவிட்டரில் முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Next Story