தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: கைது செய்யப்பட்ட 3 போலீசார் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்


தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: கைது செய்யப்பட்ட 3 போலீசார் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்
x
தினத்தந்தி 2 July 2020 8:25 PM IST (Updated: 2 July 2020 8:25 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான் குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசாரும் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி,

சாத்தான் குளம்  தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசார் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு சிபிசிஜடி போலீசார். அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசாரும், முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Next Story