3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா - டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை
அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிக்க 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை,
டாஸ்மாக் மதுபான கடைகளில் திருட்டு, தகராறு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அனைத்து கடைகளிலும் முதல் கட்டமாக அலாரம் பொருத்தப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், மாவட்ட மேலாளர், மண்டல முதுநிலை மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மண்டலததில் 535 கடைகளில் பொருத்தப்படுகிறது. இதேபோன்று கோவை மண்டலத்தில் 450, மதுரை மண்டலத்தில் 755, சேலம் மண்டலத்தில் 565, திருச்சி மண்டலத்தில் 695 உட்பட 3 ஆயிரம் கடைகளில் தலா 2 வீதம் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு, முறையாக செயல்படுகிறதா? ஆடியோ பதிவாகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வு செய்த பின்னர் அதற்கான தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் என்.பெரியசாமி கூறியிருப்பதாவது:-
“கண்காணிப்பு கேமரா பொருத்த இருப்பதற்கு அரசுக்கும், நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு கடைக்கு 2 என்பதை மாற்றி 360 டிகிரியில் கண்காணிக்கும் வகையில் 4 கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவை நவீன வகையில் ஆடியோ பதிவு, தூரத்தில் வரும் காட்சிகளை பதிவு செய்வது, மின்சாரம் இல்லாவிட்டாலும் இருளிலும் செயல்படும் வகையிலும், 6 மாத நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கும் வகையிலான கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்..
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story