மதுராந்தகத்தில் கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவர் உயிரிழப்பு


மதுராந்தகத்தில் கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 July 2020 11:46 AM IST (Updated: 3 July 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகத்தில் அரசு மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனார்.

இந்த நிலையில், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றும் சுகுமார் என்ற  மருத்துவருவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமார் இன்று உயிரிழந்தார்.

Next Story