துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட 10 பேருக்கு பா.ஜனதாவில் புதிய பதவிகள்


துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட  10 பேருக்கு பா.ஜனதாவில் புதிய பதவிகள்
x
தினத்தந்தி 3 July 2020 1:15 PM IST (Updated: 3 July 2020 1:15 PM IST)
t-max-icont-min-icon

திமுகவில் இருந்து பா. ஜனதாவுக்கு மாறிய துரைசாமி மற்றும் நமீதா உள்பட 10 பேருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

சென்னை

தமிழக பாஜகவின் மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துரைசாமி உள்ளிட்ட பத்து நபர்கள் கட்சியின் புதிய துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரைசாமியுடன், முன்னர் பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி ஆகியோரும் மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிப் பதவிகளுக்கான காலமான மூன்று ஆண்டுகளை பதவியில் இருந்தவர்கள் நிறைவு செய்துவிட்டதால் புதிய உறுப்பினரகள் பொறுப்பேற்றுள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி துரைசாமி பாஜகவின் மாநில துணை தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

1989 - 1991, 2006 - 2011 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

Next Story