"தமிழகத்தில் மது விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன" - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


தமிழகத்தில் மது விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 3 July 2020 2:52 PM IST (Updated: 3 July 2020 2:52 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மது விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன எண்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

டாஸ்மாக் விற்பனை தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக்கில் டோக்கன் முறை மூலமே மது விற்கப்படுகிறது என்றும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

தடுப்புகள் அமைத்து கூட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும், ஐந்தாயிரத்து 338 டாஸ்மாக் கடைகளில் நான்காயிரத்து 512 கடைகளே திறக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. 850 டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மெசின் மூலம் பணம் பெறப்படுகிறது என்றும்,மேலும் அனைத்து கடைகளிலும் ஸ்வைப் மெசின் மூலம் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டாஸ்மாக்கில் பணிபுரிபவர்களுக்கு கையுறை, முக கவசம், சானிட்டைசர் வழங்கப்பட்டு  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

டாஸ்மாக் கடைகளை தொடர்ச்சியாக கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வதாகவும், மத்திய அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தான் மது விற்பனை நடைபெறுவதாகவும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story