காவல்துறை புகார் ஆணையம் அமைக்கக்கோரி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழகத்தில் மாநில, மாவட்ட அளவில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கக்கோரி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
போலீஸ் சித்ரவதை, ‘லாக்-அப்’ மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும், ‘காவல்துறை புகார் ஆணையம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி மாநில அளவிலான காவல்துறை புகார் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலும், மாவட்ட அளவிலான காவல்துறை புகார் ஆணையம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலும் அமைக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் காவல்துறை புகார் ஆணையங்களுக்கு நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. அதற்கு நேர் எதிர்மாறாக, மாநில அளவிலான புகார் ஆணையத்திற்கு உள்துறை செயலாளர் தலைவராகவும், டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான புகார் ஆணையத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைவராகவும், போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
எனவே, தமிழக அரசு கொண்டு வந்த காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக உள்ளதால், இந்த அவசர சட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம் போல் மேலும் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க மாநில, மாவட்ட அளவில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story