பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 4 July 2020 3:20 AM GMT (Updated: 4 July 2020 3:20 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 6 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக் கொள்கின்றன. கொரோனா ஊரடங்கால் எரிபொருள் தேவை கணிசமாகக் குறைந்ததால், ஆரம்ப கட்ட ஊரடங்கின் போது விலை ஏற்றம் இதுவும் இன்றி இருந்தது.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரத்தொடங்கியது.  சென்னையில் கடந்த ஜூன் 29ம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல்  ஒரு லிட்டர், 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், கடந்த 5 தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையாகிறது.  6-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ. 77.72-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.


Next Story