சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் மதுரை சிறையில் அடைப்பு
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை,
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகிய 4 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். மற்றொரு காவலரான முத்துராஜை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைதான 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழலில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேரும் பேரூரணி சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story