விஷ வாயு தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்


விஷ வாயு தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 5 July 2020 2:30 AM IST (Updated: 5 July 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

விஷ வாயு தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி வழங்கினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் செக்காரக்குடி கிராமத்தில் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் குத்தப்பாஞ்சான் கிராமம், மஐரா பரம்பு நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன், தினேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, ஆறுதல் தெரிவித்தனர்.

Next Story