டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது
டாக்டர்கள், நர்சுகள் உள்பட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை,
சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விஜயா மருத்துவமனையின் முதுநிலை இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார் கூறியதாவது:-
விஜயா மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், நிர்வாக பிரிவினர் என ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5 டாக்டர்கள், 5 நிர்வாக பிரிவு பணியாளர்கள், ஏறத்தாழ 40 நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மருத்துவமனை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விஜயா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி பாரதி ரெட்டி, மருத்துவமனை ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விஜயா மருத்துவமனையின் நோயாளிகள் பிரிவு அனைத்தையும் உடனடியாக தற்காலிகமாக மூடி, அரசின் வழிகாட்டு முறைகளுக்கு ஏற்ப கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து அவசர பிரிவுகளிலும் நோயாளிகள் அனுமதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது.
விஜயா ஹெல்த் சென்டரில் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு தற்காலிக சிகிச்சை அளித்து, அவர்களின் உடல்நிலையை சீராக்கி மற்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அனைத்து வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளும் விஜயா ஹெல்த் சென்டரில் இயங்குகிறது. அங்கு ஒருநாள் விட்டு ஒருநாள் டாக்டர்கள் வந்து நோயாளிகளை கவனிப்பார்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பாரதி ரெட்டி தெரிவித்துள்ளார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் விஜயா மருத்துவமனை அடுத்த 10 நாட்கள் மூடப்பட்டு, மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அதன் பின்னரே இயங்கும் என்று தெரிகிறது.

Related Tags :
Next Story