5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க விவரங்களை பதிவு செய்ய வேண்டும் - பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு


5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க விவரங்களை பதிவு செய்ய வேண்டும் - பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு
x
தினத்தந்தி 5 July 2020 10:24 AM IST (Updated: 5 July 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் (தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் (5, 8, 10, 12-ம் வகுப்பு) மாணவர்களுக்கு மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும். பதிவுசெய்த பிறகு, தவறுகள் இருப்பின் திருத்தம் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story