சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு


சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 5 July 2020 11:21 AM IST (Updated: 5 July 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 60,538 ஆக உள்ளது. தற்போது வரை 24,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2737 பேர் 

அண்ணா நகர் - 2398 பேர் 

தேனாம்பேட்டை-2222 பேர் 

ராயபுரம் மண்டலத்தில் - 2320 பேர் 

தண்டையார்பேட்டை-2227 பேர்

திரு.வி.க. நகர்- 1775 பேர் 

அம்பத்தூரில் 1260 பேர்
 
வளசரவாக்கத்தில் 1264 பேர்

அடையாறில் 1863 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story