செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,355 ஆக இருந்தது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 197 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 6,552 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story