நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு
நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார்
சென்னை,
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்ததால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் நாளை முதல் முழு ஊரடங்கிற்கு சில தளர்வுகள் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்படுள்ளதால், நாளை முதல் அண்ணா பல்கலைக் கழகம் வழக்கம் போல் செயல்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்களும், ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பணிக்கு வாராதவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story