20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய பெண் டி.ஐ.ஜி.


20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய பெண் டி.ஐ.ஜி.
x
தினத்தந்தி 6 July 2020 1:12 AM IST (Updated: 6 July 2020 1:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சரக டி.ஐ.ஜி. டாக்டர் ஆனிவிஜயா 20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்தினார்.

திருச்சி,

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் ஆனிவிஜயா திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்று கொண்டார்.

அப்போது அவர், திருச்சி சரகத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என டி.ஐ.ஜி.ஆனிவிஜயா சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம், செம்பட்டு வழியாக மாத்தூர் வரை சென்று சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தினார். டி.ஐ.ஜி. ஆனிவிஜயா சுமார் 20 கி.மீ.தூரம் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Next Story