சென்னையில் முழு ஊரடங்கு வெற்றி மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்


சென்னையில் முழு ஊரடங்கு வெற்றி மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
x
தினத்தந்தி 6 July 2020 1:22 AM IST (Updated: 6 July 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முழு ஊரடங்கு வெற்றி தான் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இந்த உத்தரவு நேற்று வரை நீட்டிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு முழு வெற்றி அடைந்து உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். இதனால் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை எளிதில் கண்டறிய முடிந்தது. பரிசோதனைகளை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவில் கண்டறிய உதவியாக இருந்தது.

கொரோனா நோய் தொற்றால் பதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் இருக்கின்றனர். இந்த ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருந்ததால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முழு ஊரடங்கு வெற்றி தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story