சிகிச்சை பலனின்றி 60 பேர் பலி: தமிழகத்தில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா 16 மாவட்டங்களில் தொற்று ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் நேற்று புதிதாக 4,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 60 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். 16 மாவட்டங்களில் தொற்று ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னை,
தமிழகத்தின் தலைநகர் சென்னையை குறி வைத்து தாக்கிய கொரோனா, தற்போது மற்ற மாவட்டங்களிலும் தனது வீரியத்தை காட்டி வருகிறது. 16 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக நேற்று 4,150 பேர் பாதிக்கப்பட்டனர். 60 பேர் பலியாகினர்.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 22 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 51 பேர் மற்றும் மாநிலத்தில் 4,077 பேர் என மொத்தம் 4,150 பேருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் 68 ஆயிரத்து 254 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பலனாக 2 ஆயிரத்து 186 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் என மொத்தம் 60 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து சாவு எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.
15 மாவட்டங்களில் கொரோனா நோய்க்கு உயிர்பலி ஏற்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 20 பேரும், திருவள்ளூரில் 10 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 5 பேரும், சிவகங்கையில் 4 பேரும், காஞ்சீபுரத்தில் 3 பேரும், தேனியில் இருவரும், தூத்துக்குடி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று சென்னையில் 1,713 பேரும், மதுரையில் 308 பேரும், செங்கல்பட்டில் 274 பேரும், திருவள்ளூரில் 209 பேரும், வேலூரில் 179 பேரும், காஞ்சீபுரத்தில் 152 பேரும், திருவண்ணாமலையில் 141 பேரும், விருதுநகரில் 113 பேரும், விழுப்புரத்தில் 109 பேரும், ராமநாதபுரத்தில் 93 பேரும், சிவகங்கையில் 88 பேரும், திருச்சியில் 86 பேரும், கள்ளக்குறிச்சியில் 83 பேரும், திண்டுக்கலில் 74 பேரும், ராணிப்பேட்டையில் 67 பேரும், புதுக்கோட்டையில் 56 பேரும், சேலத்தில் 50 பேரும், நெல்லையில் 48 பேரும், தூத்துக்குடியில் 41 பேரும், தென்காசியில் 40 பேரும், ஈரோட்டில் 39 பேரும், கடலூரில் 26 பேரும், தேனியில் 24 பேரும், கோவையில் 23 பேரும், தஞ்சாவூரில் 16 பேரும், திருவாரூரில் 15 பேரும், கரூரில் 10 பேரும், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தலா 9 பேரும், கன்னியாகுமரியில் 8 பேரும், திருப்பூர், நாகப்பட்டினத்தில் தலா 6 பேரும், நாமக்கலில் 4 பேரும், அரியலூரில் இருவரும், பெரம்பலூர், நீலகிரியில் தலா ஒருவரும் என 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்துக்கு, சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்த 432 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 366 பேருக்கும், ரெயில் மூலம் வந்த 416 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்த 2 ஆயிரத்து 613 பேருக்கும், கடல் மார்க்கமாக வந்த 31 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 858 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 489 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 ஆயிரத்து 414 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 212 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 537 முதியவர்களும் நேற்றைய பாதிப்பில் இடம்பெற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்திருந்தது. இந்தநிலையில் நேற்று நெல்லையில் பாதிப்பு எண்ணிக்கை 1,030 ஆகவும், தேனியில் 1,009 ஆகவும் அதிகரித்தது. இதையடுத்து 16 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மதுரையில் நேற்று கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 85 ஆக உயர்ந்தது. சிவகங்கையில் தொற்று 500-ஐ கடந்து உள்ளது.

Related Tags :
Next Story