நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்காததால் நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்காததால் நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 362 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை கொரோனா நோயாளிகளுக்கு வெகுநேரமாகியும் உணவு கொடுக்காததால், நோயாளிகள் தட்டுடன் கீழ் தளத்திற்கு வந்து போராட்டம் நடத்தியதோடு, மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வரும் என்பதால், உணவு தயார் செய்யவில்லை என மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த சிறிது நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story