தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா; சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது
தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது.
தென்காசி,
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 62,778 பேர் குணமடைந்தும், 46,860 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 1,510 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோன்று தென்காசியில் கொரோனாவால் 448 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 207 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இந்த நிலையில், தென்காசியில் ஒரே ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தென்காசியில் சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த காவல் நிலையம் மூடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story