என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு, 5 அனல் மின்நிலையங்கள் மூலமாக மணிக்கு 3,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 5-வது அலகின் கொதிகலன் கடந்த 1-ந்தேதி திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த தொழிலாளர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 2-வது அனல் மின்நிலைய துணை முதன்மை பொறியாளர் சிவக்குமார்(வயது 53), சி.ரவிச்சந்திரன் (50), செல்வராஜ் (52) ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தொடர்ந்து நெய்வேலி 18-வது வட்டத்தை சேர்ந்த நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன்(45), தொப்ளிக்குப்பம் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி இளங்கோ(49), இளநிலை பொறியாளர் ஜோதிராமலிங்கம்(48) ஆகியோர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பேர் 4 கவலைக்கிடமாக உள்ளனர்.

Related Tags :
Next Story