‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் - கி.வீரமணி கோரிக்கை
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்‘ அமைப்புக்குத் 2 மாதங்களுக்குத் தடை விதித்துள்ளதாக, டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி வாய்வழி ஆணை கூறி அதை சில மாவட்டங்கள் பின்பற்றுகின்றன என்று செய்தி வந்துள்ளது.
இது உறுதி செய்யப்பட்ட செய்தியாக இருப்பின், நாம் அதனை வரவேற்கிறோம். 2 மாதங்களுக்கு மட்டும் என்று ஏன் கால நிர்ணயம் செய்யவேண்டும்? அதைத் தமிழக அரசே ஆணைகள் மூலம் கலைத்து, தேவையற்ற வீண் சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நிரந்தரமாகவே அதனைத் தடை செய்து, தமிழக அரசு எழுத்து மூலம் ஆணை பிறப்பிப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story