செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7000 ஆக உயர்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7000 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 July 2020 9:49 AM IST (Updated: 7 July 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி வருகின்றன.  

செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6,853 ஆக இருந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 147பேருக்குகொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் மாவட்டத்தில் 3,766 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 128 உயிரிழந்துள்ளனர். 2,958 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Next Story