சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்பில் மேலும் 29 பேர் உயிரிழப்பு என தகவல்
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவிற்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 70,017 ஆக உள்ளது. 1,083 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேர் மற்றும் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story