சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவைக்கு அருகில் 15 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவியை அவருடன் படித்த 4 மாணவர்கள் உள்பட 10 பேர் கற்பழித்துள்ளனர்.
இத்தகைய கொடூர வன்கொடுமை சம்பவங்களில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்று தருவதன் மூலமே தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கொண்டு வர முடியும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story