அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 8 July 2020 12:54 PM IST (Updated: 8 July 2020 12:54 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. 

இதையடுத்து நேற்று தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story